Virat Kohli : இவர்தான் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி – மைக்கேல் கிளார்க்

Clarke
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள். இந்திய அணி தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் அபாரமாக ஆடிய பாபர் அசாம் 108 பந்துகளில் 112 ரன்களை அடித்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த கிளார்க் பாகிஸ்தானின் விராட் கோலி இவர்தான் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

babar azam

பாக்கிஸ்தான் அணி இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் அது இவரைப் போன்ற இளம் வீரர்களால் மட்டுமே முடியும். அவர்களும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்று மைக்கேல் கிளார்க் கூறினார். பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்காக சில சாதனையையும் படைத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை டி20 போட்டிகளில் வேகமாக ஆயிரம் ரன்னை கடந்தவர் இவர்தான் மேலும் 21 ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்தும் இவர் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement