டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் – செம பிளேயர் தான்

Azam
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் குரூப்-2 விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. வழக்கம் போல் இல்லாமல் இம்முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அசுர பலத்துடன் பாகிஸ்தான் அணி திகழ்கிறது.

Asif

- Advertisement -

மேலும் இம்முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு உள்ள அணியாகவும் பாகிஸ்தான் அணி பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு தற்போது பாகிஸ்தான் அணி அட்டகாசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான பார்மில் உள்ளார்.

இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்த பாபர் அசாம் நேற்று நடைபெற்ற நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு முக்கியமான சாதனையை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.

azam 1

அந்த சாதனை யாதெனில் ஐசிசி நடத்தும் டி20 உலக கோப்பை தொடரில் கேப்டனாக ஒரே தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்கெதிராக 68 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 51 ரன்களும், தற்போது நமீபியாவுக்கு எதிராக 70 ரன்கள் என மூன்று அரை சதங்களை அவர் இந்த தொடரில் அடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலிக்கும், ரோஹித்துக்கும் இப்படி ஒரு சண்டையே கிடையாது – விக்ரம் ரத்தோர் ஓபன்டாக்

மேலும் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை குவித்த ஜோடியாகவும் அசாம் மற்றும் ரிஸ்வான் ஜோடி திகழ்கிறது. அதுமட்டுமின்றி கேப்டனாக ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையையும் பாபர் அசாம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement