- Advertisement -
உலக கிரிக்கெட்

74 ரன்ஸ்.. ஜிம்பாப்வேவிடம் வீரத்தை காட்டி விராட் கோலியின் உலக சாதனையை சமன் செய்த பாபர் அசாம்

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரில் நவம்பர் 23ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்ற 4வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 195/5 ரன்களை குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு சாய்ம் ஆயுப் 13 ரன்னில் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 63 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் இணைந்து மறுபுறம் அதிரடி காட்டிய பாபர் அசாம் தம்முடைய பங்கிற்கு 7 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்டு 74 (52) ரன்களை அடித்து பாகிஸ்தானுக்கு கை கொடுத்தார். கடைசி நேரத்தில் ஃபகார் ஜமான் அதிரடியாக 27* (10) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:

ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய ஜிம்பாப்வே அணி முடிந்தளவு போராடியும் 19 ஓவரில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் ராசா 23 (18), ரியன் பர்ல் 67* (49) ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் யாருமே 10 ரன்னை கூட தாண்டவில்லை.

அதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இத்தொடரில் 3வது வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக உஸ்மான் தாரிக் 4, முகமது நவாஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

- Advertisement -

வீரத்தைக் காட்டிய பாபர்:

முன்னதாக இத்தொடரில் இதற்கு முந்தைய போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய பாபர் அசாம் எதிரணி ரசிகர்களின் கிண்டல்களை சந்தித்தார். குறிப்பாக கடந்தப் போட்டியில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டி போல மெதுவாக விளையாடிய அவர் 22 பந்தில் 16 ரன்கள் எடுத்து போல்டானார். இருப்பினும் இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் வீரத்தைக் காண்பிக்கும் வகையில் விளையாடிய அவர் 142.31 ஸ்ட்ரைக் ரேட்டில் 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க: பிளான் பி தெரியாத ரிஷப் பண்ட் வெய்ட் பண்ணாம.. இதை செஞ்சுருந்தா தெ.ஆ 489 அடிச்சுருக்காது.. ஸ்டைன் விமர்சனம்

இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற இந்தியாவின் விராட் கோலியின் உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை பாபர் அசாம் 127 இன்னிங்ஸில் 38 முறை 50+ ரன்கள் அடித்துள்ளார். மறுபுறம் விராட் கோலி 117 இன்னிங்சிலேயே 38 முறை 50+ ரன்களை அடித்து தன்னைச் சாம்பியன் பிளேயர் என்பதைக் காண்பித்துள்ளார்.

- Advertisement -