பிளான் பி தெரியாத ரிஷப் பண்ட் வெய்ட் பண்ணாம.. இதை செஞ்சுருந்தா தெ.ஆ 489 அடிச்சுருக்காது.. ஸ்டைன் விமர்சனம்

Dale Styen
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக 2வது போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 489 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடும் இந்தியா 3வது நாள் உணவு இடைவேளையில் 102/4 என தடுமாறி வருகிறது. அதனால் இந்திய அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

பிளான் இல்லாத கேப்டன்:

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் வெளிப்படுத்திய தடுப்பாட்ட கேப்டன்ஷிப் இந்தியா பின்னடைவை சந்திக்க முக்கிய காரணமானதாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் விமர்சித்துள்ளார். குறிப்பாக பிளான் ஏ வேலை செய்யாத போது அவர் வேறு திட்டத்தை கையிலெடுத்து தென்னாபிரிக்க அணியை அட்டாக் செய்யவில்லை என்று ஸ்டைன் விமர்சித்துள்ளார். அதை விட்டுவிட்டு தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகள் கொடுக்கும் ரிஷப் பண்ட் காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதைப் பயன்படுத்திய தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்ததாக தெரிவிக்கும் ஸ்டைன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா புள்ளியாக பந்து வீசினார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் அவர்கள் தங்களுடைய உண்மையான திட்டத்திலிருந்து வெளியே நகர்ந்து செல்லவில்லை. அவர்கள் பிளான் ஏ’வில் மட்டும் நீண்ட நேரம் நின்றார்கள்”

- Advertisement -

ஸ்டைன் விமர்சனம்:

“அவர்கள் பிளான் பி அல்லது சி’யை நோக்கிச் செல்லவில்லை. எதிரணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் போது அவர்கள் லாங் ஆன், ஆஃப், டீப் ஸ்கொயர் ஆகிய இடங்களில் ஃபீல்டர்களை வைத்து அதிகப்படியான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அது எதிரணி பேட்ஸ்மேன்கள் எளிதான சிங்கிள்களை எடுத்து செட்டிலாக உதவியது”

இதையும் படிங்க: மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட வாஷிங்டன் சுந்தர்.. சாய் சுதர்சன் இஸ் பேக் – 3 ஆம் இடத்தில் கபடி ஆடும் இந்திய அணி

“அவர்கள் ஆரம்பத்திலேயே அட்டாக் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை களத்தின் ஒரு புறத்தில் வலுக்கட்டாயமாக அடிக்க வைக்க முயற்சித்திருக்க வேண்டும். அதை செய்யாத அவர்கள் தொடர்ந்து ஸ்டம்ப் லைனில் நேராக பந்து வீசியதால் எதிரணிக்கு இருபுறமும் ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. கொல்கத்தாவில் அந்த திட்டம் வேலை செய்தது. ஏனெனில் கொல்கத்தா பிட்ச் சுழலுக்கு அதிக சாதகமாக இருந்தது. ஆனால் இது போன்ற பிளாட்டான பிட்ச்களில் நீங்கள் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement