டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய வீரர் – அதிவேக 2000 ரன்கள் அடித்து அசத்தல்

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டி அணி இறுதிப்போட்டியில் பாபர் அசாம் 52 ரன்கள் குவித்தார்.இது அவருக்கு 52வது டி30 இன்னிங்ஸ் ஆகும். நேற்றைய போட்டியில் அவர் 17 ரன்கள் அடித்த பொழுது டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் தனது 2000 ரன்களை எட்டினார்.

- Advertisement -

இதன் மூலம் டி20 போட்டிகளில் அதி வேகமாக 2000 வரை அடித்த முதல் வீரர் ஆக பாபர் அசாம் தனது முத்திரையை பதித்துள்ளார். நேற்றைய போட்டியின் முடிவில் மொத்தமாக இதுவரை பாபார் அசாம் 52 டி20 போட்டிகளில் 2035 ரன்களை குவித்து இருக்கிறார். இதில் 18 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 122 ஆகும். டி20 போட்டிகளில் அவரது பேட்டிங் அவரேஜ் 47.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.7 ஆகும்

இதற்கு முன்னால் 56 இன்னிங்ஸ்களில் விராட் கோலி டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து இருந்தார். ஆனால் விராட் கோலியை விட நான்கு இன்னிங்சில் கம்மியாக எடுத்துக்கொண்டு, 52 இன்னிங்ஸ்களில் 2000 ஆண்டுகளை கடந்துள்ளர்.

azam

இதன் காரணமாக அதிவேகமாக 2000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் தட்டிச்சென்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விராட்கோலி 56 இன்னிங்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.அதேபோல ஆரோன் பின்ச் 62 இன்னிங்சுகளிலும் பிரண்டன் மெக்கல்லும் 66 இன்னிங்சுகளிலும் மார்டின் குப்டில் 68 இன்னிங்சுகளிலும் 2000 ரன்களை கடந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Azam

பாபர் அசாம் செய்த இந்த சாதனையை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் பாபர் அசாமை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement