- Advertisement -
உலக கிரிக்கெட்

23 ரன்களே அடித்தாலும் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய பாபர் அசாம் – விவரம் இதோ

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் நகரில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியிடம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து இந்த தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்தது.

பாபர் அசாம் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தது. பாகிஸ்தானை சார்பாக அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்களையும், கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்கள், குஷ்தில் ஷா 38 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய பாபர் அசாம் 26 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஹார்டிக் பாண்டியா பந்துவீச்சில் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் பொறுமையாக விளையாடிய இன்னிங்ஸ் தான் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக அவரது பேட்டிங் பார்ம் மீது மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்த வேளையில் இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டி அவருக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியது. அந்த வகையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடிய பாபர் அசாம் பெரிய ரன் குவிப்பை வழங்காமல் 23 ரன்கள் ஆட்டம் இழந்திருந்தாலும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மிக முக்கிய சாதனை ஒன்றினை பாகிஸ்தான் அணி சார்பாக நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஐசிசி நடத்திய தொடர்களில் வெகு விரைவாக ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த சையத் அன்வரின் சாதனையை அவர் முறியடித்தார். ஐசிசி நடத்திய 50 ஓவர்கள் கொண்ட தொடர்களில் பாகிஸ்தான் அணி சார்பாக 25 போட்டிகளில் சையத் அன்வர் 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்திருந்தார்.

இதையும் படிங்க : 100 ரன்ஸ்.. கிங் கோலி க்ளாஸ்.. 8 வருட தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி அபார வெற்றி

அவருக்கு அடுத்து ஜாவித் மியான்மத் 30 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் இந்த 23 ரன்களின் மூலம் வெகுவிரைவாக ஐசிசி தொடர்களில் 1000 ரன்களை அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -