100 ரன்ஸ்.. கிங் கோலி க்ளாஸ்.. 8 வருட தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பி அபார வெற்றி

IND vs PAK 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பிப்ரவரி 23ஆம் தேதி நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதின. துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களம் இறங்கிய அந்த அணிக்கு பாபர் அசாம் 23, இமாம் உல் ஹக் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அதனால் 47-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய சவுத் சாக்கில் அரை சதத்தை அடித்து 62 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த சல்மான் ஆகா 19, டாயப் தாஹிர் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

இறுதியில் குஷ்தில் ஷா 38, நாசீம் ஷா 14 ரன்கள் எடுத்தும் 49.4 ஓவரின் பாகிஸ்தானை 241 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் ரோஹித் சர்மா 20 (15) ரன்களில் ஷாஹீன் அப்ரிடி வேகத்தில் கிளீன் போல்ட்டானார்.

அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானமாக விளையாடினார். அவருடன் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் கில் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது அப்ரார் அகமது அபார சுழலில் 46 ரன்களில் க்ளீன் போல்ட்டானார். அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்தியா பதிலடி:

எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து அசத்திய ஸ்ரேயாஸ் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து 56 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த பாண்டியா 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 7 பவுண்டரியுடன் க்ளாஸ் சதத்தை அடித்து 100* (111) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: ஃபீல்டராக முகமது அசாருதீன் சாதனையை உடைத்த விராட் கோலி.. இந்தியாவுக்காக ஆல் டைம் சாதனை

அதனால் 42.3 ஓவரில் 244-4 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தையும் வென்றது. அதன் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அத்துடன் 2017 ஃபைனலில் தோல்வியை கொடுத்த பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா இந்தத் தொடரிலிருந்து நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பி பதிலடி கொடுத்தது. ஏனெனில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் இத்தொடரில் இருந்து பாகிஸ்தான் 99% வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

Advertisement