கோலியோடு ஒப்பிடாதீங்க. என் லட்சியம் வேறு பந்தாவாக பேசிய பாகிஸ்தான் வீரர் – விவரம் இதோ

Azam

பாகிஸ்தான் அணி இளம் வீரரான பாபர் அசாம் தனது சிறப்பான ஆட்டத்தினால் எப்பொழுதும் இந்திய அணியின் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்படும் வீரராக வலம் வருகிறார். மேலும் பாகிஸ்தான் அணி அவரை விராட் கோலி போன்ற விளையாடுகிறார் என்றும் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் குவித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற பாபர் அசாம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் தன்னை கோலி ரசிகனாகவே எப்போதும் கூறிக்கொள்கிறார். மேலும் அவரது இடத்தை பிடிப்பதே தனது லட்சியம் என்றும் அவர் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாபர் அசாம் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியதாவது : நான் கோலியின் உயரத்தை நெருங்குவதற்கு இன்னும் சில காலம் ஆகும். என்னை கோலி உடனோ அல்லது ஸ்மித் உடனோ ஒப்பிட்டு பேசினால் நான் வருத்தம் அடைய மாட்டேன் என்றும் அவர் கூறினார். மேலும் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் அவர் கோலியுடன் ஒப்பிடப்பட்டு ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறார்.

azam

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை கோலியுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது கோலியைப் போன்று நான் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் என்னுடைய தவறுகள் சிலவற்றை நான் திருத்திக் கொண்டு வருகிறேன். டெஸ்ட் அணியில் நிலையான இடம் பிடிப்பதும், முச்சதம் அடிப்பது மட்டுமே என்னுடைய தற்போதைய இலக்கு என்று பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -