டிவில்லியர்ஸ்க்கு வந்த சோதனை ? வறுத்தெடுக்கும் ரசிகர்கள் ! அப்படி என்ன செய்தார் அவர்.! விவரம் உள்ளே

AB-de-Villiers
Advertisement

கிரிக்கெட் உலகில் மிஸ்டர்.360 என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக கடந்த மே மாதம் 23 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்களும் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர்.இந்தியாவிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த விடயம் இந்திய ரசிகர்களின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

south-africa-ab-de-villiers

ஏ பி டிவில்லியர்ஸ், தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரராண இவர், `14 ஆண்டுகளாக அந்த அணியில் விளையாடி வந்தார். இதுவரை 228 ஒருநாள் போட்டிகள், 114 டெஸ்ட் போட்டிகள், 78 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.அதிரடி ஆட்டக்காரராக இவர் அந்த அணியின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் இருந்து வந்தார்.

- Advertisement -

ஏ பி டிவில்லியர்சிற்கு பல்வேறு நாட்டு ரசிகர்களும் இருக்கின்றனர். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற பிறகு இவருக்கு இந்தியவிலும் அதிக ரசிகர்கள் உருவாகினர். அதே போல இந்தியாவின் மீது கொண்ட அன்பினால் ஏ பி டிவில்லியர் தனது மூன்றாவது பிள்ளைக்கு ‘தாஜ் ‘ என்று பெயர் வைத்தார். இந்நிலையில் ஏ பி டிவில்லியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது பாட்டிலின் விளம்பரம் ஒன்றை ஷேர் செய்தது இந்திய ரசிகர்களை கோவமூட்டி உள்ளது.

Faf Du Plessis

அந்த பதிவில் மது தயாரிப்பு நிறுவனத்தின் மதுபானம் ஒன்று இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவுள்ளதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் கீழே இந்திய தேசிய கொடியும் இடம்பெற்றிருந்தது. இதனை கண்ட இந்திய ரசிகர்கள்’ ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு இப்படி மதுவிற்காக விளம்பரம் செய்யலாமா’ என்றும் உங்களுக்கு பல இந்திய ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால், நீங்கள் இந்திய கொடியுடன் பொருந்திய மது மதுபாட்டில் விளம்பர புகைப்படத்தை  பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ,எங்கள் நாட்டின் பெருமைக்கு களங்கம் விளைவித்துள்ளீர்கள்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement