பெங்களூரு அணியில் இணைந்ததும் கோலியை பார்த்து நேரடியாக இந்த கேள்வியை கேட்கணும் – இளம்வீரரின் ஆசை

Azharudeen
- Advertisement -

14ஆவது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். மார்ச் 29ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதனுடைய வளையப்பயிற்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட கேரளா வீரர் முகமது அசாருதீன் பெங்களூரு அணியில் கலந்து கொண்டு உடன் விராட் கோலியிடம் இந்த கேள்வியை நான் கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தை கூறியுள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட் பார்மேட்டுகளிலும் நிலையாக எப்படி விராட் கோலி விளையாடி வருகிறார்.

அவரது ரன் ஆபரேட் விகிதம் எப்படி மூன்று வடிவத்திலும் 50க்கும் மேல் உள்ளது என்கிற கேள்வியை முதலில் நான் விராட்கோலி இடம் கேட்பேன். பின்னர் எப்படி இவ்வளவு நிலையாக அனைத்துப் போட்டிகளிலும் உங்களுக்கு பங்களிப்பை கொடுத்து வருகிறீர்கள் என்று கேட்பேன்.மேலும் ஒரு கேப்டனாகவும் எப்படி நீங்கள் தொடர்ந்து அணியை வழிநடத்தி வருகின்றீர்கள் என்று கேட்பேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

azharudeen 2

முகமது அசாருதீன் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஞ்சி டிராபியில் தனது முதல் பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டியை தொடங்கினார். பின்னர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜய் ஹசாரே தொடரில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.அதன் பின்னர் ஜனவரி 2016 ஆம் வருடம் தனது டி20 கேரியரை சையது முஷ்டாக் அலி தொடரில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் ஜனவரி மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற சையது முஷ்டாக் அழி தொடரில் 37 பந்துகளில் சதம் அடித்தார்.

azharudeen 1

கேரளாவுக்கு சையது முஷ்டாக் அலி தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை முகமது அசாருதீன் தட்டிச் சென்றார். டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் முகம்மது அசாருதீன் 22 போட்டிகளில் விளையாடி 451 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 137 ஆகும், மேலும் அவரது ஆவரேஜ் 22.55 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 442.27 ஆகும்.

Advertisement