இந்திய அணியின் கோலிக்கு சமமான வீரர் எங்க அணியிலும் இருக்காரு. நிச்சயம் அவர் உயரங்களை தொடுவார் – பாக் கேப்டன் பெருமிதம்

Azhar-ali

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல தடைகளைக் கடந்து தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பெரும்பகுதி மழையால் தடைபட்டது.

pak

இந்நிலையில் இந்த போட்டி தொடங்கும் முன்னதாக இந்த போட்டி குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் டெஸ்ட் கேப்டன் அசார் அலி கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பாபர் அசாம் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளார். ஏற்கனவே அவர் ஸ்மித் மற்றும் விராட் கோலிக்கு இணையான வீரர் என்பது என்பதை கடந்த ஆண்டே நிரூபித்து விட்டார்.

அதுமட்டுமின்றி இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிக முக்கியமாக பாபர் அசாம் விளங்குவார் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது ஆறாம் இடத்தில் இருக்கும் அவர் நிச்சயம் பல உயரங்களை தொடுவார். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோருக்கு இணையான வீரர் என்பதை அவர் நிரூபித்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

Azam

டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமன்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவரால் சிறப்பாக விளையாட முடியும் அதை அவர் செய்தும் காட்டியுள்ளார். நிச்சயம் பாகிஸ்தான் அணியின் மிக முக்கியமான வீரராக விளங்கும் அவர் வருங்காலத்தில் இன்னும் கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதேபோல இளம் பந்துவீச்சாளர்களான நசீம் ஷா மற்றும் ஷாகின்அப்ரிடி ஆகியோர் இனிவரும் டெஸ்ட் தொடர்களில் கண்டிப்பாக இடம் பெற்று சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அசார் அலி குறிப்பிட்டது போலவே இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் சிறப்பாகவே விளையாடினார்.

azam

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து மைதானங்களில் வேதத்திற்கும், ஸ்விங்கிற்கும் குறைவில்லாமல் இருக்கும் இந்த பிட்சில் கூட அவர் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.