சதமடித்த மகிழ்ச்சியில் பேட்டை தவறவிட்டு தலையில் அடி வாங்கிய பாக் கேப்டன் – வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஒரு போட்டியை வென்ற முன்னிலையோடு தெம்பாக விளையாடியது.

pak

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 583 ரன்கள் குவித்து பிரமாண்ட துவக்கத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இங்கிலாந்து அணி 310 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இதனால் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக போட்டி டிரா ஆனது.

இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி சிறப்பாக விளையாடி 272 பந்துகளுக்கு 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 17 சதம் இதுவாகும். 205 பந்துகளை சந்தித்து அவர் இந்த சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும்.

இந்நிலையில் இந்த சதம் அடித்த பிறகு அசார் அலி தவறுதலாக தனது பேட்டை சதமடித்த மகிழ்ச்சியில் உயர்த்தும் போது அதனை தவறவிட்டார். அப்போது அவரது தலை மீது பேட் லேசாக சரிந்தது. நல்ல வேளை அவருக்கு காயமோ, அடியோ எதுவும் படவில்லை. மீண்டும் சுதாரித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரது இந்த சதத்தை பால்கனியிலிருந்து கண்டுகொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 600-வது விக்கெட்டை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.