பாகிஸ்தானை சேர்ந்த நான் இங்கிலாந்து அணியில் வெறுக்கப்பட்டு தற்கொலை வரை முயன்றேன் – இளம் வீரர் பகீர் பேட்டி

Azeem
- Advertisement -

இங்கிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த அசீம் ரஃபிக் கூறுகையில் : தனது மீது இனவாத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதனால் தான் தற்கொலை வரை சென்றதாகவும் வகையில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Azeem 3

- Advertisement -

நான் யார்க்ஷயர் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது இனவாத பிரச்சினைகளில் சிக்கி தற்கொலைக்கு மிக அருகில் வரை சென்று விட்டேன். எனது குடும்பத்தினரின் ஆசைக்காகவே நான் கிரிக்கெட் வீரராக மாறினேன். அதுமுதல் ஒவ்வொரு நொடியும் அந்த அணியில் செத்துக் கொண்டிருந்தேன். மேலும் வேலைக்குச் செல்வதற்கு பயந்த நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விருப்பப்பட்டேன்.

யார்க்க்ஷயர் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இனவாத பிரச்சனை காரணமாக என்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. மேலும் அங்கிருந்த ஒரு பயிற்சியாளரும் கூட என்னை போன்று பின்னணியில் இருந்து வரவில்லை.அதனால் அவர்களால் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை.

Azeem 2

மேலும் அதன் பிறகுதான் எனக்கு புரியவந்தது இது ஒரு விதமான இனவாதம் என்று அதனை மாற்றிக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. நான் முஸ்லிமாக இருந்து என்னை எவ்ளோ விஷயங்களை செய்து என்னை அதில் புகுத்தி கொள்ள முடியுமோ அனைத்தையும் செய்தேன். இப்படி அந்த அணியில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். அந்த நினைவுகளை நான் மறக்கவே விரும்புகிறேன்.

Azeem 1

ஆனாலும் விரைவில் அதை நிறுத்தப் போகிறேன் நான் மாறுபட்டு இருக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் அந்நாட்டில் இருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து தற்போது இங்கிலாந்து நாட்டிற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement