இப்படித்தான் ஓடுவாங்களா ? நல்லவேளை ரன் அவுட் ஆகல – வைரலாகும் வீடியோ

Azam
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் போன்று பாகிஸ்தானிலும் ஆண்டுதோறும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான மொயின் கானின் மகன் அசாம் கான் சப்ராஸ் அகமது தலைமையிலான கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று கராச்சி கிங்ஸ் மற்றும் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி 156 ரன்களை அடித்தது. அதன்பிறகு விளையாடிய கிளாடியேட்டர் அணி 157 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அசாம் கான் 30 பந்துகளில் 46 ரன்களை விளாசி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

அசாம் கான் இந்த அதிரடியால் 18 ஓவரில் கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் எதிரணி வீரர் ஒருவர் ரன்அவுட் செய்ய முயலும்போது வேகமாக ஓடி வந்த நிலையில் பேட்டை தலைகீழாக பிடித்து கிரீஸில் வைத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement