4, 4, 4, 6, 4, 4.. தரமான புவியை நொறுக்கிய ஆயுஷ்.. ரெய்னாவின் 18 வருட சாதனையை உடைத்து வருங்கால சிஎஸ்கே நாயகனாக சாதனை

Ayush mathre 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மே மூன்றாம் தேதி நடைபெற்ற 52வது போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, ரொமாரியா செபார்டு 53* ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே முடிந்தளவுக்கு 20 ஓவரில் 211/5 ரன்களை மட்டுமே எடுத்து தங்களுடைய 9வது தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே 94, ரவீந்திர ஜடேஜா 77* ரன்கள் எடுத்தப் போதிலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் எட்டாவது வெற்றியைப் பெற்ற பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

17 வயது சிங்கம்:

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணி ஆரம்பம் முதலே பேட்டிங் துறையில் அதிரடியாக விளையாட முடியாமல் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த சூழ்நிலையில் காயத்தை சந்தித்த கேப்டன் ருதுராஜ்க்கு பதில் மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார். அந்த வாய்ப்பில் ஆரம்பம் முதலே அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதை விட இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் தரமான புவனேஸ்வர் குமாருக்கு எதிராக 4, 4, 4, 6, 4, 4 என ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய அவர் ஜடேஜாவுடன் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மேலும் 9 பவுண்டரி 5 சிக்சர்களை அடித்த அவர் 94 ரன்களை 195.83 ஸ்ட்ரைக் ரேட்டில் சிஎஸ்கே வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

உதயமான வருங்காலம்:

அதையும் தாண்டி கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் சிஎஸ்கே தோற்றது. இந்தப் போட்டியின் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் சிஎஸ்கே அணிக்காக அரை சதத்தை அடித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னா சாதனையை உடைத்துள்ள ஆயுஷ் புதிய சாதனையை படித்துள்ளார். ஆயுஷ் தம்முடைய 17 வருடம் 291 நாட்கள் வயதில் சிஎஸ்கே அணிக்காக அரை சதத்தை அடித்துள்ளார்.

இதையும் படிங்க: மும்பைக்கு நியாயம்.. சிஎஸ்கேவுக்கு அநியாயம் செய்து வெற்றியை பறித்த அம்பயர்கள்.. ஆதாரத்துடன் ரசிகர்கள் விளாசல்

இதற்கு முன் 2008ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா 21 வருடம் 348 நாட்கள் வயதில் சென்னை அணிக்காக அரை சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. இது போக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் வைபவ் சூரியவன்சி (14 வருடம் 32 நாட்கள்), ரியான் பராக் (17 வருடம் 291 நாட்கள்) ஆகியோருக்கு பின் 3வது இளம் வயதில் அரை சதத்தை அடித்த வீரராகவும் ஆயுஷ் சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் இந்த வருடம் தோற்ற சிஎஸ்கே அணியின் வருங்கால வெற்றி நாயகனாக ஆயுஷ் உதயமாகியுள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement