அவர் ஓவர்ல ரிஸ்க் எடுக்க வேணாம்னு தான் கடைசி 2 ஓவர்ல அடிச்சோம் – ஆயுஷ் பதோனி பேட்டி

Badoni
- Advertisement -

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் சில இளம் வீரர்கள் விரைவிலேயே ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வெகுவிரைவாக பெரிய பிளேயராக உருவாவார்கள். அந்த வகையில் இதுவரை பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக விளையாடி உள்ளதையும் நாம் பார்த்துள்ளோம். ஆண்டுதோறும் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி பொதுவெளியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்துள்ளனர்.

Ayush Badoni 360

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியில் விளையாடி வரும் 22 வயதான இளம் வீரர் ஆயுஷ் பதோனி அதிக அளவு ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார். ஏனெனில் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் கேள்விப்படாத ஒரு இளம் வீரரான இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் லக்னோ அணி 211 ரன்களை துரத்தி விளையாடிய போது இறுதி நேரத்தில் களமிறங்கிய அவர் எந்தவித பதட்டமும் இன்றி போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தது அனைவரது மத்தியிலும் பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது.

Ayush-Badoni

இளம் வீரரான அவர் சிஎஸ்கே போன்ற முன்னணி அணிக்கு எதிராக இப்படி பயமின்றி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 211 ரன்களை துரத்திய லக்னோ அணியானது இறுதியில் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற லீவிஸ் 55 ரன்களும், பதோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

இப்படி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய பதோனி கூறுகையில் : பிராவோ வீசிய 17வது ஓவரில் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் தான் எந்த ஒரு தவறான ஷாட்டையும் அந்த ஓவரில் நாங்கள் அடிக்க முயலவில்லை. ஆனால் கடைசி 2 ஓவர்களில் நிச்சயம் அடிக்க முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

இதையும் படிங்க : போட்டியின் முக்கியமான அந்த 19 ஆவது ஓவரை ஷிவம் துபே வீச இதுதான் காரணம் – பிளமிங் கொடுத்த விளக்கம்

அந்த வகையில் கடைசி இரண்டு ஓவரை டார்கெட் செய்து அதிரடியான ஆட்டத்தை விளையாடி போட்டியை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. 210 ரன்கள் பெரிய ஸ்கோர் என்றாலும் அதனை நாங்கள் சிறப்பாக சேசிங் செய்தது மகிழ்ச்சி என பதோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement