- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காயமடைந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அழைக்கப்பட்ட இளம் வீரர் – முதல் முறையாக வாய்ப்பு

அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இந்திய அணிக்கு முதன் முறையாக அழைக்கப்பட்ட வீரர் :

அந்த வகையில் தற்போது முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று வடோதரா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் நடைபெற்று முடிந்த இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் காயமடைந்து எஞ்சியுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இப்படி வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக வெளியேறியதும் உடனடியாக அவருக்கு மாற்றுவீரராக டெல்லியை சேர்ந்த ஆயுஷ் பதோனியை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அவருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி முதல் முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்படுகிறார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : முதல் ஒருநாள் போட்டி முடிந்த கையோடு இந்திய அணியில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் – என்ன நடந்தது?

ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ஆயுஷ் பதோனி தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வருவதால் அவருக்கு முதல் முறையாக இந்திய அணிக்கான அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -