முதல் ஒருநாள் போட்டி முடிந்த கையோடு இந்திய அணியில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் – என்ன நடந்தது?

Washington Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று வடோதரா நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது.

நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் :

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பந்து வீசுகையில் விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது எஞ்சியுள்ள தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது அவர் பந்துவீசி கையில் காயத்தை சந்தித்து அசவுகரியத்தை உணர்ந்ததால் இரண்டாவதாக பேட்டிங் செய்ய வரும்போது ரன் எடுக்க ஓட முடியாமல் திணறினார். இப்படி ஒரு சூழலில் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் காயத்தால் அவதிப்படுவது தெரிய வந்தது.

- Advertisement -

அதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறினார். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர பேட்ஸ்மேனான திலக் வர்மா காயம் காரணமாக டி20 தொடரில் விளையாட முடியாத சூழலை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க : ரசிகர்கள் செய்த கிண்டலால் வேதனைப்பட்ட ராணா.. இப்படி தான் கம்பேக் கொடுத்தாரு.. ரஹானே பேட்டி

இவ்வேளையில் டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக மற்றொரு வீரரும் இப்படி காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணிக்கும் பின்னடைவாக மாறியுள்ளது.

Advertisement