சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்த பின்னர் நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி இதுதான் – அக்சர் படேல் விளக்கம்

Axar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஐசிசி கோப்பைகளை தவறவிட்ட நிலையில் இறுதியாக டி20 உலக கோப்பையை வென்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக நடைபெற்று முடிந்த அந்த தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரின் போது டேவிட் மில்லர் அடித்த பந்தை சூரியகுமார் யாதவ் லாபகமாக கேட்ச் பிடித்து அவரை ஆட்டம் இழக்க வைத்தது தான் அந்த போட்டிக்கு திருப்பமுனையாக அமைந்தது.

- Advertisement -

மேலும் அந்த ஓவரில் அவர் ஆட்டம் இழந்ததும் இந்திய அணி எளிதாக வெற்றியை நோக்கி நகர்ந்தது. மேலும் கடைசி 5 பந்துகளையும் ஹார்டிக் பாண்டியா சிறப்பாக பந்துவீச அதன் காரணமாக இந்திய அணி எளிதில் அந்த போட்டியில் வெற்றியும் பெற்றிருந்தது .

இந்நிலையில் டேவிட் மில்லர் அடித்த அந்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்ததும் தான் என்ன கேள்வி அவரிடம் கேட்டேன்? என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அக்சர் பட்டேல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடிக்கும்போது நான் மிட் விக்கெட் திசையில் இருந்தேன்.

- Advertisement -

மில்லர் பந்தை அடிக்கும் போது நிச்சயம் அந்த பந்து சிக்ஸருக்கு செல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் சூரியகுமார் யாதவ் அதை லாவகமாக கேட்ச் பிடித்தார். பின்னர் அனைவருமே அவரிடம் கேட்சை சரியாக பிடித்தீர்களா? என்று தான் முதலில் கேட்டோம். அதற்கு அவர் முதலில் ஆம் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் மாறியது குறித்து அவரது மனைவி போட்ட – நெகிழ்ச்சி பதிவு

ஆனால் சில நொடிகள் கழித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை பார்க்கலாம் என்று கூறினார். பின்னர் ரீபிளேவில் பார்த்தபோது அவர் பந்தை சரியாக பிடித்தது தெரியவந்தது. அந்த விக்கெட் கிடைத்ததுமே நாங்கள் 99 சதவீதம் உலகக் கோப்பை கைப்பற்றியதாகவே நினைத்து கொண்டாடினோம் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement