அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நிறைவடைந்த உடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்த வேளையில் ஹார்டிக் பாண்டியா அல்லது பும்ரா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது.
ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் கௌதம் கம்பீர் சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவித்து அவரது தலைமையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதில் தனது கரியரை துவங்கிய சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் புதிய கேப்டனாக மாறியுள்ள சூரியகுமார் யாதவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இவ்வேளையில் அவருக்கு அவரது மனைவி தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சில பதிவுகளை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் சூரியகுமார் யாதவின் மனைவி தேவிஷா பகிர்ந்ததாவது :
நீங்கள் இந்தியாவிற்கு விளையாட துவங்கிய போது இந்த நாள் வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் கடவுள் உண்மையில் மிகப்பெரியவர். கடின உழைப்போடும் விடாமுயற்சியுடன் போராடும் அனைவரும் ஒரு நேரத்தில் நிச்சயம் வெகுமதி பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இதையும் படிங்க : தோனிக்கு மாற்று வீரராக சி.எஸ்.கே அணிக்கு போகப்போகும் வீரர் இவர்தான் – வெளியான தகவல்
உங்கள் பாரம்பரியத்தின் ஆரம்பம் தொடங்கி விட்டது என நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். கம்பீர் எப்போதுமே நம்பி நிலையான கேப்டன் வேண்டும் என்று விரும்புவார் என்பதனால் நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியாக கேப்டனாக பயணிக்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



