பவர்பிளேவிலேயே இப்படி ஆடுனா எப்படி ஜெயிக்கிறது.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து – அக்சர் படேல் வருத்தம்

Axar-Patel
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது டெல்லி அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றினை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் டெல்லி அணியானது ஏழாவது தோல்வியை பதிவு செய்து இந்த தொடரின் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லிய அணியின் கேப்டன் அக்கர் பட்டேல் கூறுகையில் : இந்த போட்டியில் கையில் வந்த கேட்ச்களை தவறவிட்டது இந்த போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

ஒருவேளை நாங்கள் பெங்களூரு அணியை 150 ரன்களில் சுருட்டி இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். அதேபோன்று இந்த போட்டியில் பவர் பிளேவில் நாங்கள் பேட்டிங் செய்கையில் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இப்படி பவர்பிளே ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டால் சேசிங் செய்வது கடினமாகவே இருக்கும்.

இதையும் படிங்க : சிரிப்பை அடக்க முடியாமல் மோதிக்கொண்ட விராட் கோலி – இஷாந்த் சர்மா.. ரசிகர்களை நெகிழ வைத்த நட்பு

160 முதல் 170 ரன்கள் வரை இந்த மைதானத்தில் அடிக்கக்கூடிய இலக்கு தான். முக்கியமான வீரர்கள் சிலர் ரன் அவுட் ஆவதும், பவர்பிளே ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகள் விழுவதும் என இந்த போட்டி கடினமான போட்டியாக எங்களுக்கு மாறியது. எது எப்படி இருப்பினும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று பலமான அணியாக திரும்புவோம் என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement