டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான 14-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு : அக்சர் படேல் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடி குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 210 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 209 ரன்களை குவித்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடைசி நேரத்தில் போட்டியை இழந்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தோம். இரண்டு அணிகளுமே நன்றாக விளையாடியதால் இந்த போட்டி இறுதி வரை பரபரப்பாக சென்றது. இது ஒரு நல்ல போட்டியாகவே இரு அணிகளுக்கும் அமைந்தது.
இதுபோன்ற நெருக்கமான ஆட்டங்கள் ஒரு சின்ன விடயத்தில் மாறலாம் இருந்தாலும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். இதுபோன்ற சேசிங் இவ்வளவு நெருக்கமாக செல்லும்போது சில விடயங்கள் திருப்புமுனையாக அமையும். இந்த சேசிங்கில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தோம் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் இருந்தால் முன்கூட்டியே முடித்திருக்க முடியும்.
இதையும் படிங்க : 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி.. கடைசி பந்தில் போட்ட பிளான்.. வெற்றிக்கு பிறகு – சுப்மன் கில் மகிழ்ச்சி
ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் போட்டி அவர்களுக்கு சற்று கூடுதல் சாதகத்தை கொடுத்தது. நிச்சயம் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பெரியதாக யோசிக்காமல் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



