இவர் ஒருத்தரால தான் இந்திய அணியில் நிறைய பேருக்கு பிரச்சனை – வெளிப்படையாக பேசிய அக்ஸர் படேல்

Axar

இந்திய அணியின் இளம் வீரரான அக்சர் பட்டேல் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் தொடர் அறிமுகமாகி இதுவரை 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 20 வயதிலேயே இந்திய அணியில் இவர் இணைந்தாலும் 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த அக்சர் பட்டேலுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது.

Axar

அந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய அக்சர் பட்டேல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பிடித்துள்ளார். இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்தாலும் இவரால் நீண்ட நாட்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாட முடியாதது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அக்சர் பட்டேல் கூறுகையில் :

- Advertisement -

என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக என்னால் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது. அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதுமட்டுமின்றி சமீப காலமாகவே ஜடேஜா மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரால்தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. ஏனெனில் ஜடேஜாவின் ஆட்டம் அற்புதமாக இருப்பதனால் அவரை தாண்டி இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஒருவருக்கு அணியில் இடம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Axar 1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவும், ஒயிட்பால் கிரிக்கெட்டில் சாஹாலும் சிறப்பாக விளையாடினார்கள். அணியில் சில நேரம் காம்பினேஷன் மாற்றப்படுவதால் நமக்கு வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் எனது திறமையை நிரூபிக்கும் வகையில் விளையாடுவேன் எனக்கு மட்டுமின்றி அணியில் உள்ள மற்ற ஸ்பின்னர்களுக்கும் ஜடேஜாவின் ஆட்டத்தினால் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

- Advertisement -

axar1

இருப்பினும் அது அணிக்கு நன்மைதான். இந்தியாவில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் நான் சிறப்பாக விளையாடியதால் வரும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நானும் ஜடேஜாவும் நல்ல நண்பர்கள் சிஎஸ்கே அணிக்காக ஒன்றாக விளையாடி இருக்கிறோம். அதுமட்டுமின்றி எங்களுக்குள் நல்ல ஒரு நட்பு இருக்கிறது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement