- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கு முன்னாடியே பிரமோஷன் கிடைக்கும் என்று தெரியும்.. காரணத்தை கூறிய – அக்சர் படேல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரியும் : அக்சர் படேல்

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த முதலாவது போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ஹர்ஷித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 38.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டை இழந்து 251 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் இந்திய அணி 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் ஐந்தாவது இடத்தில் வந்து சுப்மன் கில்லுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர்களது இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

- Advertisement -

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் 47 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 58 ரன்கள் எடுத்து ஆட்ட மிழந்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது பேட்டிங் பிரமோஷன் குறித்து பேசிய அக்சர் படேல் கூறுகையில் : எனக்கு முன்கூட்டியே பேட்டிங்கில் ப்ரோமோஷன் கிடைக்கும் என்பது தெரியும். ஏனெனில் இந்திய அணி தற்போதுள்ள சூழலில் வலது கை இடது கை காம்பினேஷனில் அதிகம் விளையாட விரும்புகிறது.

இதையும் படிங்க : 10 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட 20 ரன்களை அடிக்கல.. ரோஹித்தை தொடரும் சோகம் – விவரம் இதோ

எனவே ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிந்து உள்ளே சென்று சிறப்பாக விளையாடினேன். அதேபோன்று மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம் கிடைத்ததால் எங்களால் சிறந்த ஏரியாவில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. நானும் சுப்மன் கில்லும் தேவையான நேரத்தில் அட்டாக் செய்து விளையாடினோம் என்றும் அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -