IND vs WI : இந்த வாய்ப்பு கிடைக்க 5 வருஷம் ஆச்சு. தனது அதிரடிக்கான காரணத்தை கூறிய – ஆட்டநாயகன் அக்சர் படேல்

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் சற்று பொறுமையாக விளையாடினாலும் இறுதி நேரத்தில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Axar Patel

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஏழாவது வீரராக களம் இறங்கி 35 பந்துகளை சந்தித்த நிலையில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 64 ரன்களை அதிரடியாக விளாசி தள்ளினார். அவரது இந்த அசத்தலான அதிரடி ஆட்டம் காரணமாகவே இந்திய அணி இந்த அருமையான வெற்றியை ருசித்தது.

அதோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவரின் இந்த அற்புதமான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கூட அக்சர் பட்டேலை ஆட்டம் இழக்க வைத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்க முடியும் என்று கூறும் அளவிற்கு அக்சர் பட்டேல் இந்த போட்டியில் தனது பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Axar Patel IND vs WI

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற அக்சர் பட்டேல் அவரது இந்த அதிரடியான ஆட்டம் குறித்து பேசுகையில் கூறியதாவது : இன்று நான் பேட்டிங் செய்த இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இந்திய அணிக்கு தேவைப்பட்ட வேளையில் மிக முக்கியமான ஆட்டமாக எனது ஆட்டம் இன்று அமைந்தது. அதோடு இந்த வெற்றியின் மூலம் நாங்கள் தொடரை கைப்பற்றியதிலும் எனது பங்கு இருப்பதை நினைத்து பெருமையாகவும் இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இதேபோன்று போட்டிகளை இறுதி வரை கொண்டு சென்று அதிரடியாக முடித்துள்ளோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் இறுதிவரை பதட்டப்படாமல் இருந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதுமட்டும் இன்றி நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அதற்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : IND vs WI : நாங்க மேட்சை தோத்ததே அந்த இடத்துல தான். தோல்விக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த – நிக்கோலஸ் பூரான்

எனவே எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். இதுமட்டும் இன்றி இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எனது அணியின் வெற்றிக்கு பங்களிக்க விரும்புகிறேன் என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement