DC vs KXIP : என் மீது எந்த தவறும் இல்லை. இது தற்செயலாகவே நடந்தது. அக்சர் ரன்அவுட் குறித்து – ஷமி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Shami
- Advertisement -

நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிவீரரான முஹம்மது ஷமி அக்சர் பட்டேல் அவுட் ஆக காரணமாக அமைந்தார். டெல்லி அணியின் வெற்றிக்கு 9 பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் அக்சர் பட்டேல் ஷமி ஓவரில் பந்தை அடித்துவிட்டு 2 ரன்னை ஓட நினைத்தார். அப்போது ஒரு ரன்னை நிறைவு செய்த அக்சர் திரும்பி 2 ஆவது ரன்னுக்கு திரும்பும்போது ஓடுபாதையில் நடுவே ஷமி இருந்ததால் அவர் மீது மோதி பிறகு திரும்பி போவதற்குள் அக்சர் ரன் அவுட் ஆனார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தான் அவுட் ஆனதற்கு ஷமி குறுக்கில் நின்றது தான் காரணம் என்று அக்சர் பட்டேல் ஷமியை திட்டிக்கொண்டே வெளியேறினார். ஆனால், போட்டி முடிந்து இதுகுறித்து பேசிய ஷமி நான் வேண்டுமென்றே நடுவில் நிற்க வில்லை. தற்செயலாகவே நடுவில் இருந்ததாக ஷமி வருத்தம் தெரிவித்தார்.

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

- Advertisement -

Iyer

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.

Advertisement