தோனி 2 டைம் மெசேஜ் பண்ணாரு.. கிரகம் நகர்வாதல் பரிகாரம் பண்ண சொன்னாரு.. 2022 சந்திப்பு பற்றி அக்சர் படேல்

Axar Patel 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தப் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு துவங்குகிறது. இந்த வருடம் அக்சர் பட்டேல் தலைமையில் களமிறங்கியுள்ள டெல்லி இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது.

அதே வேகத்தில் இந்தப் போட்டியிலும் சென்னையைத் தோற்கடித்து வெற்றி பெற அந்த அணி தயாராகியுள்ளது. மறுபுறம் ருதுராஜ் தலைமையில் 3 போட்டிகளில் 2 தோல்விகளைப் பெற்றுள்ள சென்னை பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே டெல்லிக்கு எதிரானப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை களமிறங்க உள்ளது.

- Advertisement -

கிரக மாற்றங்கள்:

இந்நிலையில் தாம் இந்தளவுக்கு வளர ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி தான் காரணம் என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறியுள்ளார். மேலும் 2022 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் முடிவில் உனக்கு கிரகநிலைகள் சரியில்லாததால் பரிகாரம் செய் என்று தோனி ஆலோசனைத் தெரிவித்ததாகவும் அவர் வித்தியாசமான பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி டெல்லி அணியின் சமூக வலைதளப் பக்கத்தில் அக்சர் பேசியது பின்வருமாறு.

“இந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் என்னுடைய கிரகங்கள் அங்கேயும் நகர்வதாக தோனி சொன்னார். அதனால் உங்களுக்கு ஒன்று நல்ல பந்து கிடைக்கும் அல்லது வேறு ஏதாவது நடக்கும் என்று சொன்னார். எனவே அதை சரி செய்வதற்கு ஏதேனும் சடங்கு செய்யுமாறு அவர் எனக்குப் பரிந்துரைத்தார். அந்தளவுக்கு மஹி பாயுடன் நான் மிகவும் நெருக்கமான நட்பை வைத்துள்ளேன்”

- Advertisement -

ஆலோசகர் தோனி:

“இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது அவரிடம் எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன். 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பின் அவரிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதற்கு முன்பாக 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக வந்த போதும் அவரிடம் நிறைய பேசியுள்ளேன். எனது மனநிலைப் பற்றி அவரிடம் நிறைய பேசினேன்”

இதையும் படிங்க: 3 வருடம் கழித்து மும்பை அணிக்கு விளையாடாத ரோஹித்.. பாண்டியா சொன்ன.. காரணத்தால் ரசிகர்கள் சந்தேகம்

“அதற்கு அவர் தெரிவித்த ஆலோசனைகள் இன்று எனது முடிவுகளில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதை உங்களால் பார்க்க முடியும். அந்தத் தொடருக்கு பின் நான் சாதித்துள்ள விஷயங்களுக்கான பாராட்டுக்கள் மஹி பாய்க்கு சேரும். எனது செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான பாராட்டுகளும் அவரைச் சேரும்” என்று கூறினார்.

Advertisement