இந்திய அணியில் இவர் மிகவும் நெருக்கமானவர். இவராலே நான் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறேன் – அக்சர் பட்டேல் ஓபன் டாக்

Axar-3
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ஆடி அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் ஆடி அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தவர் அக்ஷர் பட்டேல். இவர் குஜராத்தை சேர்ந்தவர். இடது கை சுழற்பந்து வீச்சும், இடது கை பேட்டிங்கும் செய்வார். முதன்முதலில் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வாகி அதன் பின்னர் 2014ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் அணியில் இணைந்தார். இவரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் சிறப்பாக இருந்ததால் விரைவில் இந்திய அணியில் இடம்பிடித்த அவர் தனது வாய்ப்பினை தக்கவைக்க தவறினார்.

axar

2014 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருடங்கள் பஞ்சாப் அணிக்காக ஆடினார். மேலும் 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐ.பி.எல் தொடரில் விளையாடியதுபோல அவரால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன்காரணமாக எவ்வளவு விரைவாக இந்திய அணிக்கு தேர்வாகினாரோ அதே வேகத்தில் இந்திய அணி நிர்வாகத்தால் கழட்டி விட பட்டார்.

- Advertisement -

தற்போது 25 வயதான இவர் டெல்லி அணிக்காக 5 கோடி கொடுத்து சென்ற வருடம் ஐபிஎல் தொடரின் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது பேசியுள்ளார் அக்சர் படேல் : எனக்கு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் பரிச்சயமானவர். அவருடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடி உள்ளேன். நாங்கள் இருவரும் ஏற்கனவே நன்றாக அறிமுகமானவர்கள்.

axar 1

டெல்லி அணிக்காக விளையாட அவரது உதவி எனக்கு மிகவும் தேவைப்பட்டது. அவர் ஒரு நல்ல கேப்டன். மைதானத்தில் நமக்கு தேவையானதை கேட்டு செய்வார். மிகவும் அமைதியான மனிதராக இருக்கும் அவருக்கு கீழ் விளையாட எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அக்சர் படேல்.

axar 2

கவுதம் கம்பீர் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியின் கேப்டன் பொறுப்பினை ஏற்றார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இளம்வீரர்களை கொண்ட டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மங்கி இருந்த டெல்லி அணிக்கு புது ரத்தம் பாய்ச்சியதுபோல் ஐயர், பண்ட் மற்றும் சாம்சன் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement