ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளில் முடிவில் சமநிலையில் இருந்த அத்தொடரின் 4வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நவம்பர் ஆறாம் தேதி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 167/8 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 46, அபிஷேக் சர்மா 28, அக்சர் பட்டேல் 21*, சிவம் துபே 22, கேப்டன் சூரியகுமார் யாதவ் 20 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 18.2 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆட்டநாயகன் அக்சர்:
அதிகபட்சமாக கேப்டன் மார்ஷ் 30, மேத்தியூ ஷார்ட் 25 ரன்கள் எடுத்த போதிலும் கிளன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 2, சிவம் துபே 2, வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 21 ரன்கள், பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் பிட்ச்சை பார்த்து மற்ற இந்திய பேட்ஸ்மேன்களிடம் விவரத்தை கேட்டறிந்து அதற்கு தகுந்தார் போல் ஆஸ்திரேலியாவை அடித்ததாக அக்சர் தெரிவித்துள்ளார். அதே போல பந்து வீச்சில் பின்பற்றிய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பிட்ச்சை பார்த்து:
“7வது இடத்தில் பேட்டிங் செய்ததால் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் பேட்ஸ்மேன்களுடன் பேசிய போது பிட்ச்சில் வந்து நன்றாக பேட்டுக்கு வரவில்லை, எதிர்பாராத பவுன்ஸ் இருக்கிறது, ஸ்லோவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே எனது இடத்தை பிடித்து அடித்தேன். இந்திய அணி எங்கு பேட்டிங் செய்ய விரும்புகிறதோ அதுவே எனக்கு விருப்பமான இடமாகும். எங்கு விளையாடினாலும் அணிக்காக தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே எனக்கு சிறந்தது”
இதையும் படிங்க: உலககோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு சிறப்பு பரிசை அறிவித்த டாடா மோட்டார்ஸ் – விவரம் இதோ
“6 – 7 தான் எனக்கு பிடித்த இடம் என்று சொல்ல மாட்டேன். அணிக்காக தேவைப்படும் இடத்தில் விளையாடுவேன். எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னை கோட்டுக்கு வெளியே அடித்தால் நான் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசுவேன். நல்ல லென்த், 5 – 6 மீட்டர் லென்த்தில் வீசுவதே எனது திட்டம். ஒருவேளை விஷயங்கள் கை மீறிச்சென்றால் ஃபுல் லென்த் பந்துகளை வீசுவேன். இந்த பிட்ச்சில் இதுவே எனது திட்டம். விக்கெட் டூ விக்கெட்டில் வீசுவது முக்கியம்” என்று கூறினார்.



