உலககோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு சிறப்பு பரிசை அறிவித்த டாடா மோட்டார்ஸ் – விவரம் இதோ

IND W and Tata
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், லாரா உல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதன்படி கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த மகளிர் உலகக்கோப்பை தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது நடைபெற்றது.

இந்திய மகளிர் அணிக்கு சிறப்பு பரிசை அறிவித்த டாடா மோட்டார்ஸ் :

அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 246 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன்மூலம் முதல் முறையாக இந்திய மகளிர் அணி 50 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய மகளிர் அணி பெற்ற இந்த வெற்றிக்கு நாடு முழுவதும் மிகப் பெரிய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன. அதோடு பல்வேறு தரப்பில் இருந்தும் அவர்களுக்கு பரிசு மழையும் பொழிந்து வருகிறது.

அந்த வகையில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ சார்பில் 51 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய வீராங்கனைகள் ஒரு சிலருக்கு அவர்களை சார்ந்த மாநில அரசும் பரிசுத்தொகையும், உயர் பதவிகளையும் அரசாங்கம் மூலம் வழங்கியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் உலககோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு சிறப்பு பரிசினை அறிவித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் விரைவில் அவர்களது நிறுவனம் மூலம் அறிமுகமாக உள்ள டாட்டா சியாரா கார் ஒன்றினை பரிசாக வழங்கப்போகிறோம் என்ற அறிவிப்பை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவங்க 2 பேர் இருந்தும் சுப்மன் கில் டி20 அணிக்கு தேவையா? மெதுவான ஆட்டத்தால் – ரசிகர்கள் விளாசல்

ஏற்கனவே இரண்டு முறை உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணியானது பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது அனைவரது மத்தயிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement