ஆர்சிபி பலத்தை புரிஞ்சு ஸ்பின்னை யூஸ் பண்ணேன்.. நான் செஞ்ச கஷ்டமான வேலையை ராகுல் செய்றாரு.. அக்சர் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 24வது போட்டியில் டெல்லி அணி பெங்களுருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு பில் சால்ட் 37, டிம் டேவிட் 37 ரன்கள் எடுத்த உதவியுடன் 164 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. டெல்லிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

அடுத்து விளையாடிய டெல்லிக்கு டு பிளேஸிஸ் 2, ஜேக் பிரேசர் 7, அபிஷேக் போரல் 7, கேப்டன் அக்சர் படேல் 15 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 58-4 என என தடுமாறிய டெல்லிக்கு 4வது இடத்தில் விளையாடிய ராகுல் 93* (53) ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 38* (23) ரன்கள் எடுத்ததால் 17.5 ஓவரில் 169-4 ரன்களை எடுத்த டெல்லி தங்களுடைய நான்காவது வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

ஸ்பின் முடிவு:

மறுபுறம் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் பெங்களூரு இரண்டாவது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் பில் சால்ட் அடித்து நொறுக்கியதால் 3 ஓவரில் 60 ரன்கள் அடித்த பெங்களூரு 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஆரம்பத்திலேயே ஸ்பின்னர்களை அக்சர் படேல் அறிமுகப்படுத்தியது திருப்புமுனையை உண்டாக்கி டெல்லி வெற்றிக்கு உதவியது.

இந்நிலையில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக விளையாடுவார்கள் என்ற பலத்தை புரிந்து ஸ்பின்னர்களை பயன்படுத்தும் முடிவை எடுத்ததாக தெரிவிக்கும் டெல்லி கேப்டன் அக்சர் படேல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணி விளையாடும் விதத்தை வைத்து அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். 4க்கு 4 வெற்றிகளைப் பெற்றதால் நன்றாக உணர்கிறோம்”

- Advertisement -

ராகுல் அசத்தல்:

“பெங்களூரு அணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள விரும்புவார்கள். எனவே ஆரம்பத்திலேயே ஸ்பின்னர்களை பயன்படுத்துவது நல்ல வாய்ப்பு என்று கருதினேன். பந்தும் கொஞ்சம் நின்று பவுன்ஸ் ஆகி வந்தது. பவர் பிளேவில் ஸ்பின்னர்களை அடிப்பது கடினம் என்று கருதினேன். அப்படி இருந்தும் 19வது ஓவர் தவறாக அமைந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றதால் அது பரவாயில்லை”

இதையும் படிங்க: ஆர்சிபியை விட எனக்கு தான் இது நல்லா தெரியும்.. கீப்பரா இருப்பதால் ஈஸியா ஜெயிக்க வெச்சுட்டேன்.. ராகுல் பேட்டி

“குல்தீப் நீண்ட வருடங்களாக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். 18வது ஓவரில் கூட தைரியமாக பவுலிங் செய்த விப்ராஜை ஸ்பெஷலாக இங்கே குறிப்பிட வேண்டும். ராகுல் போன்றவர் விளையாடினால் என்னுடைய வேலை எளிது. இதற்கு முன் நானும் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பேட்டிங் வரிசையில் மாறி மாறி விளையாடியதால் அந்த வேலையை செய்வது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். அவரைப் போன்றவர் எங்கள் அணியில் இருப்பது நல்லது. முதிர்ச்சியான இன்னிங்ஸ் விளையாடிய அவர் சாம்பியன்ஸ் ட்ராபியில் வைத்திருந்த ஃபார்மை தொடர்கிறார்” என்று கூறினார்.

Advertisement