இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக ரோஹித் சர்மா ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றார். அதனால் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா புதிய முழு நேர கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புதிய பயிற்சியாளராக வந்துள்ள கௌதம் கம்பீர் அவருக்கு பதில் சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக சுமாரான ஃபிட்னஸ் காரணமாக ஹர்திக் பாண்டியா தொடர்ந்து விளையாடுவதில்லை என்பதால் 2024 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சூரியகுமார் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் சூரியகுமார் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
புதிய கேப்டன்:
மேலும் கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவருடைய தலைமையில் இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் 2023 ஆஸ்திரேலிய தொடரில் சூரியகுமார் பவுலர்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கக்கூடிய கேப்டனாக செயல்பட்டதை பார்த்ததாக அக்சர் படேல் கூறியுள்ளார்.
புதிய கேப்டன் சூரியகுமார் பற்றிய தமது கருத்தை அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “சூரியகுமாருடன் நான் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன். சூர்யா பாய் ஒரு மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலி. மிமிக்ரி செய்யக்கூடிய அவர் வேடிக்கையான விஷயங்களை செய்து அணியை கலகலப்பாக வைத்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். சமீபத்தில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டார்”
“அவர் பவுலர்களின் கேப்டன் என்பதையும் நான் அறிவேன். ஏனெனில் அவர் பவுலர்கள் கேட்கக்கூடிய ஃபீல்டிங்கை கொடுப்பார். எனவே இப்போதும் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். இன்னும் அதிகமாக விளையாடும் போது அவருடைய கேப்டன்ஷிப் மற்றும் ஸ்டைலை பற்றி தெரிந்து கொள்வோம். ஏனெனில் நீங்கள் ஒரு தொடரை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. அதே போல கௌதம் கம்பீர் பாய் இலங்கை வந்துள்ளார்”
இதையும் படிங்க: இதென்ன புதுசா? சாம்சன் கழற்றி விடப்பட இதான் காரணம்.. ரசிகர்களுக்கு வேற வழியில்லை.. உத்தப்பா கருத்து
“அங்கு நடக்கும் மீட்டிங்கில் நாங்கள் சில விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். குறிப்பாக கம்பீர் என்ன நினைக்கிறார் என்பதையும் அவருடைய தலைமையில் என்னுடைய வேலை என்ன என்பதைப் பற்றியும் நான் தெரிந்து கொள்வேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.