- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபைனலில் 34/3 என இந்தியா சரிந்ததும் அவர் தான் என்னை பேட்டிங்ல ப்ரோமோட் பண்ணாரு.. அக்சர் படேல் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, சிவம் துபே 27 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த தென்னாபிரிக்கா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளாஸின் 52, டீ காக் 39 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

முக்கிய திட்டம்:
முன்னதாக அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 9, ரிஷப் பண்ட் 0, சூரியகுமார் யாதவ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 34/3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியதால் ரசிகர்கள் கவலையடைத்தனர். அந்த நேரத்தில் சிவம் துபே அல்லது ஹர்திக் பாண்டியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது பேட்டிங்கில் பிரமோஷன் பெற்ற அக்சர் படேல் 5வது இடத்தில் களமிறங்கி விராட் கோலியுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினார். குறிப்பாக விராட் கோலி மெதுவாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தென்னாபிரிக்க பவுலர்களை வெளுத்து வாங்கிய அச்சர் பட்டேல் 1 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்டு 47 (31) ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஃபைனலில் 3 விக்கெட்டுகள் விழுந்ததும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் திடீரென தம்மை பேட்டிங் செய்ய செல்லுமாறு சொன்னதாக அக்சர் படேல் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தினேஷ் கார்த்திக் கேட்ட போது அவர் பதிலளித்தது பின்வருமாறு. “ஃபைனலில் மேல் பேட்டிங் வரிசையில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை”

இதையும் படிங்க: குஷனை நகர்த்தி ஏமாத்தீட்டாங்க.. சூரியகுமார் பிடிச்சது கேட்ச் இல்ல.. பாக் ரசிகர்கள் விமர்சனத்துக்கு பொல்லாக் பதில்

“வழக்கம் போல எப்படியும் கீழ் வரிசையில் தான் பேட்டிங் செய்வோம் என்று பெவிலியனில் அமர்ந்திருந்தேன். ஆனால் ஆரம்பத்திலேயே நாங்கள் 3 விக்கெட்டுகள் இழந்ததும் ராகுல் பாய் என்னிடம் “அக்சர், உபகரணங்களை அணிந்து கொள்” என்று சொன்னார். ஆரம்பத்தில் ஃபைனலில் எனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும் என்றே நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அந்த வாய்ப்பு எனக்கு வேலை செய்தது” என்று கூறினார்.

- Advertisement -