2009க்குப்பின் இது ஈஸியா இருக்கும்ன்னு நினைக்கல.. சென்னையை வீழ்த்த இதான் காரணம்.. கேப்டன் அக்சர் பேட்டி

Axar Patel
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் 17வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை அதன் சொந்த மண்ணில் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி ராகுல் 77, அபிஷேக் போரேல் 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 184 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

சென்னைக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய சென்னை மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 158-5 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது மூன்றாவது தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு ரச்சின் 2, கேப்டன் ருதுராஜ் 5, கான்வே 13, துபே 18, ஜடேஜா 2 என முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஹாட்ரிக் வெற்றி:

கடையில் விஜய் சங்கர் 69*, தோனி 30* ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் 15 வருடங்கள் கழித்து சென்னையை சேப்பாக்கம் மைதானத்தில் தோற்கடித்த டெல்லிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து இந்த வருடம் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் டெல்லி 3 வெற்றிகளை பெற்றுள்ளது.

அதனால் 2009க்குப்பின் 16 வருடங்கள் கழித்து டெல்லி அணி ஒரு ஐபிஎல் தொடரில் தங்களது முதல் 3 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் 2009க்குப்பின் இந்த ஹாட்ரிக் வெற்றி இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என டெல்லி கேப்டன் அக்சர் படேல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதற்கு சமநிலைப் பொருந்திய தங்களது அணியில் அனைவரும் அசத்துவதே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வலுவான டெல்லி:

மேலும் தங்களுடைய சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்று சொல்லும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் வெற்றியில் பங்காற்றினர். அணியின் சமநிலை நன்றாக இருக்கிறது. கேப்டனாக 3 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெறுவது நல்ல உணர்வைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: எல்லாமே செஞ்சு பாத்துட்டோம்.. சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியை சந்திக்க இதான் காரணம்.. ருதுராஜ் கவலை பேட்டி

“ஒவ்வொரு போட்டிகளும் சில சிறப்பான கேட்ச்களும் இருக்கும். அதை தவற விடுவதும் இருக்கும். எனவே ஒரு கேப்டனாக உங்களுடைய அணி இதுவரை ஒரு கச்சிதமான போட்டியை விளையாடியது என்று நான் நினைக்கவில்லை. ஐபிஎல் மிகப்பெரிய தொடர். அதில் வேகம் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்” என்று கூறினார்.

Advertisement