- Advertisement -
ஆசிய கோப்பை

பாகிஸ்தான் அணிக்கெதிரான அடுத்த போட்டியில் அக்சர் படேல் விளையாடுவது சந்தேகம் – என்ன நடந்தது?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஓமன் அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி இந்த தொடரில் மூன்றாவது வெற்றியினை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது :

அடுத்த போட்டியில் அக்சர் படேல் விளையாடுவாரா? :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்களையும், அபிஷேக் ஷர்மா 38 ரன்களையும் குவித்தனர். பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் அணி 20 அவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் போட்டியின் 15-வது ஓவரின் போது ஓமன் வீரர் அடித்த பந்தை பீல்டிங் செய்ய ஓடிவந்து தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் விழுகையில் அவரது தலை நேராக தரையில் மோதியது.

அதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக கழுத்துப் பகுதியை பிடித்துக் கொண்டார். உடனே மைதானத்திற்குள் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்ததோடு சேர்த்து தொடர்ந்து அவரால் பீல்டிங் செய்ய முடியாது என்பதால் மைதானத்தில் இருந்தும் வெளியே அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

அதன்பிறகு போட்டி முடியும் வரை அவர் மீண்டும் பீல்டிங் செய்ய களத்திற்கு திரும்பவில்லை. இதன் காரணமாக அவருக்கு பெரியளவில் ஏதாவது காயம் ஏற்பட்டுள்ளதா? அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : தோனி, ரிஷப் பண்ட் கூட செய்யாத சாதனையை நிகழ்த்தி அசத்திய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

ஆனால் இந்த போட்டிக்கு பிறகு அக்சர் படேலின் காயம் குறித்து பேசிய பில்டிங் பயிற்சியாளர் கூறுகையில் : அக்சர் பட்டேல் தற்போது நல்ல நிலையில் தான் இருக்கிறார். இன்னும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு 48 மணி நேரம் இருப்பதனால் அதற்குள் அவர் தயாராகி விடுவார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்று போட்டி நாளை செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

- Advertisement -