
கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்ததால் புதிய டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் கடந்த பல தொடர்களாகவே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய டி20 அணியானது எந்த ஒரு தொடரையும் இழக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்திய டி20 அணியின் இந்த செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதேவேளையில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருந்து வருகிறார். ரவீந்திர ஜடேஜா இந்திய டி20 அணியில் இருந்தவரை உள்ளேயும் வெளியேயும் இருந்த அக்சர் பட்டேல் ரவீந்திர ஜடேஜாவின் ஓய்வுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அக்சர் பட்டேல் பெரியளவில் கை கொடுப்பதனால் அவரின் அந்த திறனை கருத்தில் கொண்டு இந்திய அணியின் நிர்வாகமும் அவருக்கு டி20 அணியின் துணை கேப்டன் வழங்கி கௌரவித்திருந்தது. அந்த வகையில் கடந்த பல தொடர்களாகவே சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் பட்டேல் துணை கேப்டனாகவும் இந்திய டி20 அணியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சமீபத்தில் பொறுப்பேற்ற சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் மிகச்சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தியதால் அவர் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுக்க இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அப்படி சுப்மன் கில்லுக்கு மீண்டும் டி20 அணியில் இடம் கிடைத்தால் அக்சர் பட்டேலின் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
அதாவது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் எதிர்காலத்தில் மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் ஒருவேளை அவர் டி20 போட்டிகளுக்கு கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் அக்சர் பட்டேலின் டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : சுப்மன் கில்லை சேர்த்தா அது நியாயமா இருக்காது.. நிராகரிக்க தயாராகும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ
மேலும் சில ஆண்டுகளில் சூரியகுமார் யாதவ் டி20 கேப்டன் பதவியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் டி20 கேப்டனாகவும் கில் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை வெளியாகியுள்ள செய்திகளின் படி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை கூறப்படுகிறது.