
எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்க இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த சில தொடர்களாகவே இந்திய அணி துணை கேப்டனாக இருந்து வந்த பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் அவருக்கு இனி தொடர்ந்து இந்திய டி20 அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் இந்த பதவியின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏனெனில் டி20 வடிவ கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் அவர் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக ஜடேஜாவிற்கு மாற்று வீரராக பார்க்கப்படும் அக்சர் பட்டேல் இனி நிரந்தர இடம் பிடித்து விளையாடுவார் என்று தெரிகிறது.
அதோடு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்சர் படேல் அறிமுகமாகி இருந்தாலும் மற்ற வீரர்களின் ஆதிக்கத்தால் இதுவரை 10 ஆண்டுகளில் 66 டி20 போட்டிகளில் மட்டுமே அக்சர் பட்டேல் விளையாடி உள்ளார். ஆனால் இனி அவர் தொடர்ந்து இந்திய அணியின் முதன்மை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்பது உறுதி.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவை தாண்டி அக்சர் படேலுக்கு துணை கேப்டன் பதவி வழங்க இதுவே காரணம் – விவரம் இதோ
ஏனெனில் பின்வரிசை மட்டுமின்றி டாப் ஆர்டரிலும் பேட்டிங் செய்யும் திறமை கொண்ட அக்சர் படேல் பந்துவீச்சில் 4 ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசுபவர் இதன் காரணமாகவே அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பணிச்சுமையை காரணம் காட்டியோ அல்லது காயத்தை காரணம் காட்டியோ அடிக்கடி விலக கூடியவர் அல்ல என்பதனாலே அவருக்கு இந்த பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டதோடு பிளேயிங் லெவனிலும் இடம் கிடைக்கும் என்பது உறுதி.