- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அக்சர் படேலுக்கு ஆசை காட்டி மோசம் செய்த இந்திய அணியின் நிர்வாகம் – ஒருதலை பட்சமான நடவடிக்கை

2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்வுக்குழுவினர் மற்றும் கம்பீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்று முடிந்த மீட்டிங்கிற்கு பிறகு சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிதான் ஆசிய கோப்பை தொடரிலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கும் என்று தெரிகிறது.

அக்சர் படேலுக்கு துரோகம் செய்த பி.சி.சி.ஐ :

இந்நிலையில் இன்று வெளியான இந்த அறிவிப்பில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த அக்சர் படேல் நீக்கப்பட்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வரும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரது மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த பல தொடர்களாக அக்சர் படேல் துணை கேப்டனாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய டி20 அணியில் இருந்து சமீப காலமாக ஒதுக்கப்பட்டு வந்த சுப்மன் கில் மீண்டும் டி20-க்கு கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்றி துணை கேப்டனாகவும் நிர்வாகத்தின் ஆதரவின் காரணமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக சூர்யகுமார் யாதவுக்கு பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டனாகவும் மாறுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என்கிற பேச்சு எழுந்து வந்த வேளையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை கில் விரைவில் பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. மேலும் சூரியகுமார் யாதவ் தற்போது 34 வயதை எட்டிவிட்டதால் அடுத்த சில ஆண்டுகளில் சுப்மன் கில் டி20 போட்டிகளுக்கான கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

இப்படி இந்திய அணியின் நிர்வாகம் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில்லை பார்ப்பதன் காரணமாகவே தற்போது அவருக்கு துணை கேப்டன் பதவியை வழங்கியுள்ளது. கடந்த சில தொடர்களாகவே இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த அக்சர் பட்டேல் ஆல்ரவுண்டாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்து விளையாடி வந்தார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா.. சுப்மன் கில்லை வைத்து பிசிசிஐ, கம்பீர், அகர்கர் போடும்.. மாஸ்டர்பிளான் இதோ

அதேவேலையில் இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் ஐபிஎல் போட்டிகளில் செயல்பட்டிருந்தார். எதிர்கால இந்திய டி20 அணியின் கேப்டனாக ஆசைப்பட்ட அவருக்கு அணி நிர்வாகம் தற்போது பதவி நீக்கத்தின் மூலம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சுப்மன் கில்லுக்கு ஆதரவு தருவதாக நினைத்து ஒருதலை பட்சமாக செயல்பட்டு அக்சர் படேலை துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -