WI vs SL : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் புதிய உலகசாதனை படைத்த – இலங்கை வீரர்

உலகக் கோப்பைத் தொடரின் 39வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின

Avishka
- Advertisement -

உலகக் கோப்பைத் தொடரின் 39வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

wi vs sl

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ 104 ரன்கள் எடுத்தார். குஷால் பெரரா 64 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 315 ரன்கள் குவித்தது. இதனால் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பாக மலிங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக நிக்கோலஸ் பூரான் 118 ரன்கள் குவித்தார்.

avishka 1

இந்த போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ சதமடித்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது யாதெனில் மிகக் குறைந்த வயதில் இலங்கை அணிக்காக உலக கோப்பை தொடரில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் நேற்று பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று அடித்த சதம் அவரது 21 ஆவது வயதில் அவர் அடித்துள்ளார். இதன் மூலம் இலங்கை அணி வீரர் ஒருவர் இலங்கை அணி சார்பாக உலகக்கோப்பை தொடரில் குறைந்த வயதில் சதமடித்தவர் என்ற சாதனையை அவர் நேற்றைய போட்டியில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement