தான் அணியில் இல்லாவிட்டாலும் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் என்ன சொன்னார் தெரியுமா

Warner
- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் இந்த 11வது ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் கலந்துகொள்ள முடியாமல் போனது.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னர் முக்கிய குற்றவாளி என விசாரணையில் தெரியவந்தது.

warner

- Advertisement -

இந்நிலையில் இன்று இரவு ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.இந்நிலையில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.தான் அணியில் விளையாட முடியவில்லை என்றாலும்,தான் விளையாடிய அணிக்காக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.சக வீரர்கள் விளையாடும் போட்டியை எங்கோ ஒரு ஆளாக பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் இந்த ஆண்டு வலுவான வீரர்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையிலும் ஷிகர் தவான்,மனீஷ் பாண்டே மற்றும் வில்லியம்சன் ஆகியோரும், சாகிப்-ஹல்-ஹசேன் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் சிறந்த ஆல்ரவுண்டர்களாகவும், பந்துவீச்சை பொறுத்தவரையிலும் புவனேஷ் குமார், ரஷீத்கான்,
கார்லோஸ் பிராத்வெய்ட்,கிறிஸ் ஜோர்டான் போன்றோர் என வலுவாக உள்ளனர்.

david-warner

ஹைதராபாத் அணி வீரர்களின் முழுவிவரங்கள் பின்வருமாறு :-

அலெக்ஸ் ஹேல்ஸ், புவனேஷ்வர் குமார், சையத் கலீல் அகமட், டி.நடராஜன், ரஷீத் கான், தன்மய் அகர்வால், பேசில் தம்பி, ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், பில்லி ஸ்டான்லேக், தீபக் ஹூடா, மெஹதி ஹசன் (இந்திய வீரர்), கார்லோஸ் பிராத்வெய்ட், சந்தீப் சர்மா, சச்சின் பேபி, பிபுல் ஷர்மா, சித்தார்த் கவுல், யூசுப் பத்தான், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமி, மணீஷ் பாண்டே, கிறிஸ் ஜோர்டான், ஷிகர் தவண், சஹா, கேன் வில்லியம்சன், மொகமது நபி.

Advertisement