ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் பாண்டிங் கூறும் இந்த வார்த்தை தான் எனது சக்சஸுக்கு காரணம் – ஆவேஷ் கான்

Avesh
- Advertisement -

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடர் ஆனது ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கி 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளனர். அந்த வகையில் டெல்லி அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அவனது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

டெல்லி அணியில் சீனியர் வீரரான இஷாந்த் ஷர்மா அணியில் இருந்தும் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பவுலர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தான் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்கு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கொடுத்த சில அறிவுரைகள் தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் டெல்லி அணியின் பயிற்சியாளரான பாண்டிங் என்னிடம் வந்து இந்த நான் கொடுக்கும் இந்த ஒரு வாய்ப்பை வீணடித்து விடாதே என்று சொல்லுவார்.

avesh

அதுமட்டுமின்றி ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக நான் அந்த போட்டியில் வைத்திருக்கும் திட்டங்களைப் பற்றி என்னுடன் கலந்துரையாடி எந்தெந்த நேரத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதையும் என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அவர் சொல்லும் அறிவுரைகளை கேட்டால் நமக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். எனவே அதை வைத்தே நான் பந்துவீசி வந்தேன் அதுமட்டுமின்றி ஒவ்வொரு போட்டியின் போதும் அந்த போட்டியை பற்றி மட்டுமே யோசிக்க சொல்லுவார், தவிர்த்து அந்த தொடர் குறித்து எதையுமே யோசிக்க வேண்டாம் என்றும் என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார்.

avesh khan

அவர் சொல்லும் ஆலோசனைகளை அப்படியே கேட்டு அதிலிருந்து நான் பந்து வீசியதால் என்னால் சிறப்பாக பந்து வீச முடிகிறது. மேலும் இன்னும் அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறேன். பாண்டிங்குடன் கலந்துரையாடுவதால் என் ஆட்டம் மேம்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement