WTC ஃபைனல் : உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அந்த இந்திய வீரரின் விக்கெட்டை எடுத்துட்டா கப் ஆஸி’க்கு தான் – பாண்டிங் அதிரடி

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் நழுவ விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா போராட உள்ளது.

IND vs AUS

- Advertisement -

முன்னதாக டெஸ்ட் போட்டிகளை உயர்ப்பிக்கும் வண்ணம் 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் சுற்றில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்று சக்கை போடு போட்டு முதலிடம் பிடித்த இந்தியா ஃபைனலில் நியூசிலாந்திடம் மண்ணை கவ்வியது. குறிப்பாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த காலகட்டத்தில் 2021 ஜூன் மாதம் சௌதம்டன் நகரில் நடைபெற்ற அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் 44, 13 என குறைவான ரன்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஆஸ்திரேலியாவின் பரிசு:
இருப்பினும் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து கடந்த 8 மாதங்களுக்குள் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பிய அவர் 2023 ஐபிஎல் தொடரிலும் 4 வருடங்கள் கழித்து 3 இலக்க ரன்களை தொட்டு உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தற்போது கேப்டன்ஷிப் அழுத்தம் எதுவும் இல்லாமல் சுதந்திர பறவையாக விளையாடும் அவர் நிச்சயமாக ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து இந்தியா கோப்பையை வெல்ல போராடுவார் என்று நம்பலாம்.

இந்நிலையில் ஃபைனலில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தால் அதற்கு பரிசாக ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை கிடைக்கும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் பேசிய போது முழுமையான ஃபார்முக்கு திரும்பி விட்டதாக தம்மிடம் தெரிவித்த விராட் கோலி இந்த ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுப்பார் என்று கூறும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு மாதம் முன்பு பெங்களூருவில் நாங்கள் விளையாடிய போது விராட் கோலியிடம் நான் பேசினேன். அப்போது தற்போதைய பேட்டிங் மற்றும் உங்களுடைய கேரியரில் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை பற்றி அவரிடம் கேட்டறிந்தேன். அதற்கு தம்முடைய சிறந்த செயல்பாடுகளின் உச்சகட்டத்திற்கு வந்துள்ளதை உணர்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அந்த வகையில் கடந்த இரவில் (ஹைதெராபாத்துக்கு எதிரான சதம்) அவர் விளையாடிய விதம் இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டார் என்பதை காட்டுகிறது”

Ponting

“எனவே ஃபைனலில் அவருடைய விக்கெட்டை பரிசாக எடுப்பதற்கு ஆஸ்திரேலியர்கள் முயற்சிப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். மேலும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்டிங் எந்தளவுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதை இந்த ஃபைனலில் பார்க்க நாம் ஆவலுடன் காத்திருக்கலாம். மேலும் இந்த போட்டியை 2 கோணத்தில் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க:IPL 2023 : தோனியின் ஓய்வு குறித்த முடிவு ஒருத்தருக்கு மட்டுமே தெரியும் – மைக்கல் ஹஸ்ஸி அளித்த பேட்டி

“ஒன்று தற்போது சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து ரன்களை குவித்து வரும் விராட் கோலி ஃபைனலில் அசத்தும் தன்னம்பிக்கையை கொண்டுள்ளாரா? அல்லது ஆஸ்திரேலியாவில் இருக்கும் எங்களுடைய வீரர்கள் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடாததால் மனதளவில் தயாராக இருந்தாலும் அதிக போட்டிகளில் விளையாடதாது சரியா? அதே போல் நுணுக்கங்கள் அடிப்படையில் பட் கமின்ஸை விட ஷமி சிறந்த இடத்தில் இருக்கிறாரா? ஏனெனில் கமின்ஸ் கடந்த ஒரு மாதமாக எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதே போல் ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் அத்தொடரை மட்டும் நினைக்க மாட்டார்கள். மாறாக பணிச்சுமையை நிர்வகித்து இந்த ஃபைனலுக்கு சில வாரங்கள் முன்பாக தயாராக இருக்கலாம் என்பதை அவர்கள் விரும்புவார்கள்” என்று கூறினார்.

Advertisement