
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள புகழ்பெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. பொதுவாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்து எதிரணி வீரர்களின் கவனத்தை சீர்குலைத்து வெற்றிகளைப் பெறுவதில் வல்லவர்கள். ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களை இந்தியாவின் விராட் கோலி பலமுறை ஸ்லெட்ஜிங் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்யக்கூடிய வீரர் யார் என்று ஆஸ்திரேலிய வீரர்களிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டது. ஆச்சரியப்படும் வகையில் ஸ்டீவ் ஸ்மித், நேதன் லயன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்தார்கள். அதில் மார்னஸ் லபுஸ்ஷேன் “கால் சட்டையை” பலகையில் வரைந்து காட்டி “பண்ட்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அந்த வகையில் ரிஷப் பண்ட் தான் தங்களை ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்து ஜாலியாக டார்ச்சர் செய்யக்கூடியவர் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் கூறியுள்ளனர். அதே வீடியோவில் “தாம் வேண்டுமென்று ஸ்லெட்ஜிங் செய்வது கிடையாது அன்பாக செய்கிறேன்” என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். முன்னதாக 2018 – 19 தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அடுத்து நடைபெறும் டி20 தொடருக்கு தோனி விளையாட உள்ளார்.
அதனால் சும்மா இருக்கும் நேரத்தில் என்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் போது கலாய்த்தார். அதற்கு அவர் பேட்டிங் செய்யும் போது “யாராவது தற்காலிக கேப்டனை பார்த்திருக்கிறீர்களா?” என்று சொல்லி ரிஷப் பண்ட் கலாய்த்து தக்க பதிலடி கொடுத்தார். அதோடு நிற்காத ரிஷப் பண்ட் அப்போட்டி முடிந்ததும் நேரடியாக டிம் பெய்ன் மனைவியை சந்தித்து அவரின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள சென்றார்.
அந்த வகையில் களத்தில் சொன்னதை நிஜத்தில் ரிஷப் பண்ட் செய்து காட்டியது மறக்க முடியாத தருணமாக அமைந்தது. இது போக ரிஷப் பண்ட் “இவரையெல்லாம் அவுட்டாக்க எதையும் செய்ய வேண்டியதில்லை. அவராகவே அவுட்டாகி சென்று விடுவார்” என்று நேதன் லயனை கலாய்தார். அப்படி நிறைய ஆஸ்திரேலிய வீரர்களை விக்கெட் கீப்பராக அவர்களுடைய சொந்த மண்ணில் ரிஷப் பண்ட் கலாய்த்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டியில் அறிமுகமாக இருக்கும் இளம் இந்திய வீரர் – ஜாக்பாட் தான்
அதனால் 2020 – 21 தொடரின் போது இந்திய அணியை சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் “நீங்கள் தானே எங்கள் வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தது” என்று ரிஷப் பண்ட்டிடம் நேரடியாக கேட்டு ஜாலியாக பாராட்டினார். மொத்தத்தில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்து விளையாடுகிறார். அதனால் மீண்டும் ஆஸ்திரேலிய வீரர்களை அவர் கலாய்ப்பார் என்று எதிர்பாக்கலாம்.