ஆஷஸ் வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி கொண்டாடினார்கள் தெரியுமா ? – வீடியோ இதோ

Eng-vs-Aus
- Advertisement -

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 211 ரன்கள் அடித்து தனது சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2001ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளது. மீதி எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தாலே கோப்பையை வென்று விடும் நிலையை எட்டி உள்ளதால் ஆஸ்திரேலியா தற்போது சிறப்பான நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்த வரலாற்று வெற்றியை சிறப்பிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது வெற்றியை சிற்றப்பாக கொண்டடாடினார்கள். அவர்களது இந்த வெற்றி கொண்டாட்டம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியை அந்நாட்டு வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்நாட்டு ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை இணையத்தின் வழியாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement