கில், விராட் கோலி கிடையாது.. இவர் தான் இந்தியாவின் புதிய கிங்.. பட்டம் சூட்டி வரவேற்ற ஆஸி பத்திரிகை

virat kohli
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹார்ட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இம்முறை ஆஸ்திரேலியாவில் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் கடந்த காலங்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாட இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

புதிய கிங்:

அதனால் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிங் என்று அழைப்பது வழக்கமாகும். அதே போல நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் சுப்மன் கில்லை பிரின்ஸ் என்று இந்திய ரசிகர்களும் ஊடகங்களும் வர்ணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரபலமான டெய்லி டெலிகிராப் எனும் பத்திரிகையில் “இந்தியாவின் புதிய கிங் யசஸ்வி ஜெய்ஸ்வால்” என்று தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு. “வீரேந்திர சேவாத்திற்கு பின் ஜெய்ஸ்வால் மிகுந்த ஆக்ரோசமாக விளையாடக்கூடிய துவக்க வீரர். விராட் கோலிக்கு பின் அவர் இந்தியாவின் சுவாரஸ்யம் மிகுந்த பேட்ஸ்மேன். இதுவரை அவருடைய வெற்றிகரமான செயல்பாடுகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய துணை கண்டத்தில் வந்துள்ளது”

- Advertisement -

ஆஸி ஊடகம் பாராட்டு:

“தென்னாபிரிக்காவில் முதல் முறையாக விளையாடிய தொடரில் மட்டும் அவர் 12.50 சராசரியை கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமான ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் அவர் 712 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: பும்ராவை பெர்த் மைதானத்தில் அடிக்க இப்போவே இந்த திட்டத்தை ரெடி செஞ்சுகிட்டு இருக்கேன்.. ஆஸி வீரர் பேட்டி

அதனால் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல உதவினார். அதே போல சமீபத்திய நியூசிலாந்து தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா தடுமாறிய போது அவர் முடிந்தளவுக்கு நன்றாகவே விளையாடினார். அந்த வரிசையில் தற்போது தம்முடைய வாழ்நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஜெயஸ்வால் விளையாட உள்ளார். அந்த வாய்ப்பில் அவர் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement