ஆஸ்திரேலியா அடி வாங்கல.. நம்மல நல்லா யூஸ் பண்றாங்க.. அங்கயும் இந்தியாவை காப்பாத்துவோம் – ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படை

Shreyas Iyer Adam Zamba
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா படுதோல்விகளை சந்தித்தது.

அதிலும் குறிப்பாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் 3 – 2 (5) என்ற கணக்கில் தோற்ற ஆஸ்திரேலியா தற்போது இந்தியாவிலும் 2 – 0* (3) என்ற கணக்கில் தோற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இருப்பினும் கேப்டன் பட் கமின்ஸ், மேக்ஸ்வெல், மிட்சேல் ஸ்டார்க் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் காயத்தை சந்தித்து இப்போட்டிகளில் விளையாடாததால் ஆஸ்திரேலியா தொடர்ச்சியான 5 தோல்விகளை சந்திக்க நேரிட்டது.

- Advertisement -

எச்சரிக்கையுடன் ஸ்ரேயாஸ்:
எனவே தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதற்காக மனம் தளராமல் போராடி வெற்றி காணும் குணத்தை இயற்கையாகவே கொண்ட ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே 5 உலக கோப்பைகளை வென்றுள்ளதால் இந்த தோல்விகளிலிருந்து மீண்டு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் இத்தொடரில் தங்களை பயன்படுத்தி உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா பயிற்சிகளை எடுப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

குறிப்பாக இத்தொடரில் தங்களிடம் அடி வாங்கினாலும் உலகக் கோப்பைக்கு தேவையான கலவையையும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா உருவாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார். எனவே இந்தியா எச்சரிக்கையுடன் இருந்து உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை திறம்பட எதிர்கொள்ளும் என்று விழிப்புணர்வுடன் பேசும் அவர் இது பற்றி 2வது போட்டியின் முடிவில் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலிய அணி யார் என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் இப்போட்டியை வெறும் பயிற்சி களமாக வைத்து தேவையான திட்டங்களை வகுத்து வருகின்றனர். குறிப்பாக உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்கள் தங்களுடைய சோதனைகளை நிகழ்த்தி ஃபார்மை உருவாக்குகின்றனர். மேலும் இந்திய சூழ்நிலைகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் அவர்கள் இத்தொடரை பயன்படுத்தி வருகின்றனர்”

இதையும் படிங்க: மந்தனாவை பார்க்க 1000 யுவன் செலவு.. 1200 கி.மீ கடந்து வந்த சீன ரசிகர்.. பிடித்த 3 இந்திய கிரிக்கெட்டர்கள் பற்றி நெகிழ்ச்சி பேச்சு

“அதே சமயம் சவாலை கொடுக்கும் கிரிக்கெட்டையும் அவர்கள் விளையாடுகின்றனர். எனவே வருங்கால போட்டிகளில் அவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் சரியான திட்டங்களை தயாராக வைத்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதனால் அவர்களை நான் குறைத்து மதிப்பிடப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் பெரிய வலியான தோல்வியை கொடுத்து விடுவார்கள். இருப்பினும் தரமான அவர்களுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே உங்களுக்கு சிறந்த சவாலாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement