மந்தனாவை பார்க்க 1000 யுவன் செலவு.. 1200 கி.மீ கடந்து வந்த சீன ரசிகர்.. பிடித்த 3 இந்திய கிரிக்கெட்டர்கள் பற்றி நெகிழ்ச்சி பேச்சு

Smriti Mandhana.jpeg
- Advertisement -

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிரணி அரையிறுதி சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து ருதுராஜ் கைக்வாட் தலைமையிலான ஆடவர் இந்திய அணி களமிறங்கும் போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த 2017 முதல் விளையாடி வரும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தம்முடைய மிகச் சிறப்பான பேட்டிங் திறமையால் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சாதனை மங்கையாக அசத்தி வருகிறார். குறிப்பாக இந்திய மகளிர் அணியின் பேட்டிங் துறையில் விராட் கோலி போல தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு திறமை கொண்ட மிகவும் முக்கிய வீராங்கனையான அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

சீன ரசிகர்:
ஆனால் கிரிக்கெட்டை பெரிய அளவில் அறிந்திராத சீனாவில் அவருடைய மிகப்பெரிய ரசிகர் பார்ப்பதற்காக 1200 கிலோ மீட்டர் பயணித்து ஃபைனலில் மந்தனா விளையாடியதை பார்க்க வந்துள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஆம் ஜுன் யூ எனும் பெயரை கொண்ட அந்த ரசிகர் பெய்ஜிங் நகரிலிருந்து ஃபைனல் நடைபெற்ற ஹங்கொழு நகருக்கு மந்தனா விளையாடுவதை பார்த்து உற்சாகப்படுத்துவதற்காகவே 1200 கி.மீ பயணித்து வந்துள்ளார்.

குறிப்பாக “மந்தனா ஒரு தெய்வம்” என்று பேனரில் எழுதி வைத்து ஃபைனலில் அவர் மந்தனாவுக்கு ஆதரவு கொடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் கிரிக்கெட்டை யூடியூப் வாயிலாக அதிகமாக பார்த்ததாக தெரிவிக்கும் அவர் சச்சின் டெண்டுல்கர், பும்ரா, மந்தானா ஆகியோர் தமக்கு மிகவும் பிடித்த 3 இந்திய கிரிக்கெட்டர்கள் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரையும் மிகவும் பிடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் 1000 யுவன் (114000 ரூபாய்) செலவு செய்து பெய்ஜிங்கிலிருந்து இங்கு வந்துள்ளேன். ஒரு கிரிக்கெட்டராக மந்தனாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் வலுவான பிளேயர். அவர் விளையாடுவதை நேரில் பார்க்கவே இங்கு நான் வந்தேன். இருப்பினும் அடுத்ததாக எனக்கு படிப்பு இருப்பதால் ஆடவர் அணி விளையாடும் போட்டிகளை பார்க்க முடியாது. எனக்கு பிடித்த வீரர் கேன் வில்லியம்சன்”

“ஆனால் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் லெஜெண்ட் ஆவார். மேலும் சச்சின், பும்ரா, மந்தனா ஆகியோர் மிகவும் பிடித்த 3 இந்திய கிரிக்கெட்டர்கள். நான் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ராவின் பவுலிங்கை பார்த்தேன். அதே போல விராட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரையும் பின்பற்றி வருகிறேன். தற்போது சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement