- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 பேரை பாத்து ஆஸ்திரேலிய அணி பயந்துட்டாங்க.. அதான் அந்த இந்திய வீரரை டார்கெட் பண்றாங்க.. பசித் அலி

பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024 – 25 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. ஏனெனில் சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியா காலம் காலமாக இந்தியாவை தோற்கடித்து வந்தது. ஆனால் அப்படிப்பட்ட வலுவான ஆஸ்திரேலியாவை கடைசியாக அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.

அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா உள்ளது.

- Advertisement -

பயப்படும் ஆஸ்திரேலியா:

ஆனால் இம்முறை இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்ல தயாராகி வருவதாக ஆஸ்திரேலிய அணியினர் தெரிவித்து வருகின்றர். குறிப்பாக கடந்த 2 தொடர்களில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமான ரிஷப் பண்ட்டை இம்முறை சைலண்டாக வைத்திருப்போம் என்று கேப்டன் பட் கமின்ஸ் சமீபத்தில் கூறினார். அதே போல சிக்ஸர்கள் அடித்தாலும் பரவாயில்லை இம்முறை ரிஷப் பண்ட்டை அடக்கத் திட்டங்கள் வகுத்துள்ளதாக நேதன் லயன் கூறினார்.

மறுபுறம் இந்தியாவிலிருந்து யாருமே அப்படி எந்த ஆஸ்திரேலிய வீரரையும் குறிப்பிட்டு கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்களான ஆஸ்திரேலியா இம்முறையும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இந்தியாவின் மனதுடன் விளையாடத் துவங்கியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரிஷப் பண்ட்க்கு குறி:

குறிப்பாக ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளதால் அவரை ஆஸ்திரேலிய அணியினர் குறி வைத்துள்ளதாகவும் பசித் அலி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா மனதளவில் விளையாடுகின்றனர். ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரைக் கண்டு ஆஸ்திரேலியா பயப்படும்”

இதையும் படிங்க: 2 மணிநேரம் மழை நின்றும் துவங்காத போட்டி.. 3 ஆம் நாள் ஆட்டமாவது நடைபெறுமா? – விவரம் இதோ

“ரிஷப் பண்ட் சமீபத்தில் நல்ல ரன்கள் எடுத்துள்ளார். எனவே ஆஸ்திரேலியா மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ரிஷப் பண்ட்டை குறி வைக்க முயற்சிக்கின்றனர். இதுவே அவர்களுடைய மனநிலை. அவர்கள் வேறு எதையோ காட்டுகிறார்கள். மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -