- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்க காரணமே ரோஹித்தின் கதையை முடிக்க தானாம் – ரோஹித் சர்மாவின் கடைசி தொடர்

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக முடிவு எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பை வரை இந்திய அணியில் விளையாடி அந்த கோப்பையை கைப்பற்றிய பின்னரே ஓய்வு பெற வேண்டும் என்ற திட்டத்துடன் ரோகித் சர்மா இருந்து வருகிறார். ஆனாலும் ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரோஹித் சர்மாவின் கடைசி தொடர் :

அந்த வகையில் ஏற்கனவே வெளியான ஒரு தகவலில் : இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் ஜொலிப்பார் என்பதனால் அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வை உறுதிப்படுத்தும் விதமாகமே, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவை இந்திய அணியில் இருந்து புறக்கணிக்க தான் புதிய கேப்டனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின்படி : ரோகித் சர்மா அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம் என்பதனாலே ஷ்ரேயாஸ் ஐயரை புதிய கேப்டனாக கொண்டுவர நிர்வாகம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதனாலும், அதற்குள் ரோகித் சர்மா 40 வயதை எட்டி விடுவார் என்பதனாலும் இந்திய அணியின் நிர்வாகம் ரோகித் சர்மாவின் மீது ஆர்வம் காட்ட வில்லை. எனவே எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரே ரோகித் சர்மாவின் கடைசி தொடராக பார்க்கப்படுகிறது. அந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள ரோகித் சர்மா அந்த தொடரோடு ஓய்வு அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2027 வேர்ல்டுகப் ஆடனுமா? அப்போ பர்ஸ்ட் இதை பண்ணுங்க.. ரோஹித்துக்கு செக் வைத்த கம்பீர் – விவரம் இதோ

ஏற்கனவே ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து நிர்வாகம் சில முடிவுகளை எடுத்துள்ளதால் ரோகித் சர்மா தானாக முன்வந்து ஆஸ்திரேலியா தொடரின் போது ஓய்வு அறிவிக்கலாம் என்ற ஒரு தகவலும் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இருந்தாலும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -