- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிசிசிஐ’யை விடுங்க.. ரோஹித், விராட் கோலிக்கு நாங்க ஃபேர்வெல் தரோம்.. ஆஸி வாரியம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். ஏற்கனவே அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஜோடியாக ஓய்வு பெற்றார்கள். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜோடியாக விடை பெற்றுள்ள அவர்கள் இனிமேல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார்கள்.

தென்னாபிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி ஐசிசி தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதற்கு முன்பாக அவர்கள் இந்தியா விளையாட உள்ள 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்த அவர்கள் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அறிவிப்பு:

ஆம் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் கடைசி முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாட உள்ளார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ ஃபேர்வெல் கொடுக்காமல் ஏமாற்றியது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்தது.

ஆனால் தங்களுடைய நாட்டில் வரும் அக்டோபர் மாதம் அவர்களுக்கு ஃபேர்வெல் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டோட் க்ரீன்பெர்க் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா எங்களுடைய நாட்டில் விளையாடுவதை நாங்கள் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம். ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம் யாருக்கு என்ன தெரியும்”

- Advertisement -

ஜாம்பவான்களுக்கு ஃபேர்வெல்:

“ஒருவேளை அதுவே கடைசித் தொடராக இருக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்காற்றிய அவர்களுக்கு நாங்கள் சிறப்பான வழி அனுப்புதலைக் கொடுப்போம்” என்று கூறினார். அத்துடன் விராட் கோலி பிக்பேஷ் தொடரின் விளையாடுவதை விரும்புவதாக தெரிவித்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “இது பற்றி பிசிசிஐ’யுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்”

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணியின் மீது இப்படி ஒரு அன்பா.. லண்டனில் இருந்து அகமதாபாத் வந்த பில் சால்ட் – விவரம் இதோ

“இந்த வருட பிபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அது எங்களுடைய நாட்டில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை உண்டாக்கும். ஆனால் தற்சமயத்தில் அது நடக்கவில்லை. அது போன்ற விஷயத்தை நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஒரு இலக்காகும். இந்தியாவை சேர்ந்த அனைத்து வீரர்களும் இங்கே விளையாடுவதற்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -